தனியாரிடம் நிலக்கரி கொள்முதல்: மின்வாரியம் முடிவு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      தமிழகம்
eb 2017 10 31

சென்னை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு மின்வாரிய இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழ்நாடு மின்வாரியம் தனது அனல்மின் நிலையத்தில் மின் சார உற்பத்திக்குத் தேவை யான நிலக்கரியை மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்திடம் வாங்குகிறது. அந்த நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதியில் கனமழை பெய்ததால் சுரங்கங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், நிலக்கரி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தவிர, முன்பு தனியார் நிறுவனத்திடம் இருந்து தேவையான நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு மத் திய அரசு தடை விதித்ததால், தனியாரிடம் நிலக்கரி கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நிலக்கரி தேவையை சமாளிக்க தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து