குஜராத் சட்டமன்ற தேர்தல்: 60 ஆயிரம் பாதுகாப்பு படையினரை அனுப்ப மத்திய அரசு திட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      இந்தியா
central gcenovernment(N)

அகமதாபாத், குஜராத் மாநிலத் தேர்தலை முன்னிட்டு சுமார் 60,000 பாதுகாப்புப் படையினரை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 14-வது சட்டப்பேரவைத் தேர்தல் 182 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தல் இரண்டு கட்டமாக டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதற்காக மத்திய அரசு சுமார் 60,000 பாதுகாப்புப் படையினரை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இதில் சிஐஎஸ்எப், பிஎஸ்எப், சிஆர்பிஎப், ஆர்பிஎப், ஐடிபிபி, எஸ்எஸ்பி ஆகிய பாதுகாப்புப் படை வீரர்கள் அடக்கம்.இதில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்களுக்காக சமையல்காரர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற அலுவலக ஊழியர்களும் அனுப்பப்படுகின்றனர்.


இதுதவிர பாதுகாப்புப் படையினரின் தேர்தல் பணிக்காக 650 ரயில் கோச்சுகளைத் தயார் நிலையில் வைக்குமாறு இந்திய ரயில்வேயிடம் மத்திய அரசு கோரியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 43.3 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்தில் உள்ள 50,128 வாக்காளர் நிலையங்கள் அனைத்திலும் முதல்முறையாக விவிபாட் வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து