முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையத்தில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு பேரணி

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம், -ராஜபாளையத்தில் நடைபெற்ற உலக நீரிழிவு தின விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையத்தில் சங்கராகண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து உலக நீரிழிவு தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை சங்கரா கண் மருத்துவமனையின் மருத்துவர் சுதா துவக்கி வைத்து கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து எடுத்துரைத்தார். சங்கரா கண் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி மணிமாறன் மனிதர்களை தாக்கும் சர்க்கரை நோய் குறித்து எடுத்துரைத்தார். விபிஎம் கல்லூரி நிர்வாகி தங்கபிரபு நோய் தாக்குதால் ஏற்படும் பக்க விளைவுகள், நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள், நோய் தாக்குதலால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் ஒரே விதமான சீருடைகளை அணிந்தவாறு, காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக கிளம்பிய பேரணி மதுரை சாலை, பழைய பேருந்துநிலையம், காமராஜர்சாலை, டி.பி.மில்ஸ் சாலை, ரயில் நிலையம், ரயில்வே பீடர் சாலை போன்ற முக்கிய வீதிகள் வழியாக வந்து அரசு பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் சுரன் நர்சிங் கல்லூரி மாணவிகள், ரோட்டரி கிளப் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து