கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலர் பழங்களைக் கொண்டு கேக் தயாரிக்கும் விழா

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      நீலகிரி
14ooty-2

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலர் பழங்களைக்கொண்டு கேக் தயாரிக்கும் விழா ஊட்டி ஜெம்பார்க் ஓட்டலில் நடைபெற்றது.

50 கிலோ உலர் பழங்கள்

ஊட்டியில் உள்ள பிரபலமான நட்சத்திர ஓட்டலான ஜெம்பார்க்கில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. ரெசிடெண்சியல் மேலாளர் இஸ்மாயில் கான், உணவு மேலாளர் பிரதீப், தலைமை சமையல் கலைஞர் சுரேந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஓட்டல் ஊழியர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டு கேக் தயாரிக்கும் பொருட்களான உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, அத்திப்பழம், செரிபழம், பேரீச்சம்பழம், வால்நட், சாட் பவுடர் உள்ளிட்ட 35 வகையான 50 கிலோ எடையிலான உலர் பழங்களை ஒன்றாக கலந்து அதனை செரியூட்டும் வகையில் பிராந்தி, ரம், விஸ்கி, ஒயின் போன்ற 7 வகையான மதுபானங்களையும் ஊற்றி ஒன்றாக கலந்து வைத்தனர்.

ஒரு மாதம் வரை

இக்கலவையானது ஒரு மாதம் வரை ஊறவைக்கப்பட்ட பின்னர், மைதா, முட்டை, சர்க்கரை, தேன், கரம்மசாலா, வெண்ணெய், நெய் போன்றவைகளுடன் கலந்து கேக்காக தயாரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு விநியோகிக்கப்படும் எனவும், அப்போது சுவையும், மணமும் கொண்ட கேக்காக உண்டு சுவைக்கலாம் என உணவு தயாரிப்பு கலைஞரான சுரேந்திரன், உணவு மேலாளர் பிரதீப் ஆகியோர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து