பொன்னை வள்ளிமலை அரசு மேல்நிலைபள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிகணினி: எம்.எல்.ஏ துரைமுருகன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      வேலூர்
wj

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வள்ளிமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சிவகாமி தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியை உமாமகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

மடிகணினி வழங்கும் விழா

 நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்ராக சட்டமன்ற எதிர்கட்சி துணைதலைவரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர்மான துரைமுருகன் கலந்து கொண்டு தமிழக அரசின் விலையில்லா மடிகணினியை 86 மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். மேலும் வள்ளிமலை அரசு மேல்நிலைபள்ளிக்கு ஆண்கள் பெண்களுக்கு என தனி கழிப்பறை எம்எல்ஏ நிதியில் இருந்து கட்டித்தரப்படும் என உறுதியளித்தார். மேலும் பள்ளிக்கு ஆடிடோரியம் கட்டிதர தலைமை ஆசிரியர் கோரிக்கை வைத்தார் அதனையும் செய்து கொடுக்கிறேன் என கூறினார். இதனை தொடர்ந்து பொன்னை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 132மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 168 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கி சிறப்புறையாற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தேவிகாராணி தலைமை தாங்கினார்.

அப்பள்ளிக்கு மேல்நீர் தேக்க தொட்டியுடன் கூடிய கழிவறை கட்டிதரப்படும் என எம்எல்ஏ துரைமுருகன் உறுதியளித்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சி துணைதலைவரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர்மான துரைமுருகன் பேசியதாவது:1971ம் ஆண்டில் நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் காட்பாடி வட்டத்தில் உள்ள மேல்நிலைபள்ளிகளை நான்தான் கொண்டு வந்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 11முறை வெற்றி பெற்று இருக்கிறேன் என்று சொன்னால் அந்த அளவிற்கு மக்களுக்கு தேவைகளை செய்து கொடுத்து இருக்கிறேன் எப்பொழுதும் துரைமுருகன் சொன்னதை தான் செய்வார் செய்வதை தான் சொல்வேன் என மக்களுக்கு தெரியும் என பேசினார். மேலும் பொன்னையில் அரசு கலைகல்லூரி கொண்டு வரப்படும் என மாணவர்களுக்கு உறுதியளித்து இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து