சேலம் 29வது கோட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: மாநகர செயலாளர் வெங்கடாஜலம் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      சேலம்
slm 1

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று 29 வது கோட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்..கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

 ஆலோசனை கூட்டம்

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாநகரில் உள்ள 60 வது கோட்டங்களிலும் கட்சி வளர்ச்சி பணிகள்,வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல் மற்றும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நடைப்பெற்று வருகிறது.நேற்று சேலம் 29 மற்றும் 30 வது கோட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெர்றது.29 வது கோட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் சேலம் டவுன் ரயில் நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தி்ல் நடைப்பெற்றது.கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். வட்ட செயலாளர் ராஜேந்திரன் முனிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர் செல்வம்சேலம் தெற்கு தொகுதி எம்.எல்...பி.சக்திவேல்,முன்னாள் மேயர் எஸ்.சவுண்டப்பன்,துணை மேயர் நடேசன்,முன்னாள் மாநகர செயலாளர் எம்.கே.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்..தலைமை வகித்து சேலத்தில் வரும் காலங்களில் அதிமுகவின் வளரச்சி குறித்தும்,வாக்களர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்தல், புதிய பெயரை சேர்த்தல், அதிமுகவிற்கு புதியஉறுப்பினர்களை சேர்த்தல் போன்ற பணிகளை கட்சி நிர்வாகிள் மேற்கொள்ள வேண்டும்,பொதுமக்களுக்கு சாலை,குடிீநீர்,சாக்கடை கால்வாய் அமைத்தல் போன்ற முக்கியமான அத்தியாவசிய பணிகள் எங்கெங்கு செய்ய வேண்டும் என்பதை எம்.எல்..க்கள்,எம்.பி.யிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் தியாகராஜன்,கே.ஆர்.எஸ்.சரவணன்,ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன்,மகளிர் ணி செயலாளர் ஜமுனா ராணி,இணைச் செயலாளர்கள் ஏ,கே.எஸ்.பாலு,மதலேனா,துணை செயலாளர் பாமா கண்ணன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து