திருப்பூர் மாவட்டத்தில் இணையவழியில் பட்டா மாறுதல் சேவை கலெக்டர் தொடங்கிவைத்தார்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      திருப்பூர்
bb

திருப்பூர் மாவட்டத்தில் இந்திய மின் ஆளுமை நிலப்பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய நகர்ப்புற நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழி சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகரம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை நகர்ப்புற பகுதியிலுள்ள நிலங்களுக்கு இணையவழியில் பட்டா மாறுதல் மனுக்களை பொது சேவை மையங்கள் மூலமாக இணையதளத்தில் எளிதில் சமர்ப்பிக்கவும், நிலப்பதிவேடுகளின் (வுளுடுசு) நகல்களை எவ்வித கட்டணமுமின்றி இணையவழியில் பதிவிறக்கம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் பொதுமக்கள் நகர்ப்புற நில ஆவணங்களின் நகல்களை பெற அரசு அலுவலகங்களுக்கு செல்ல அவசியமில்லை எனவும் இணையவழி சேவையின் மூலமாக எளிதாகவும் விரைவாகவும் எப்பொழுதும் எங்கிருந்தும் நகர நிலப்பதிவேட்டின் நகல்களை றறற.வn.பழஎ/நளநசஎiஉநள என்ற இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், திருப்பூர் மாநகர நகர்ப்புற வரைபடங்கள் கணினி மூலம் வரைவு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளதால் இந்த வரைபடங்களும் விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக இணையவழி சேவையின் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும், பொது மக்கள் குடியிருந்துவரும் மனை நத்தம் பகுதிகளுக்கான ஆவணங்களும் விரைவில் இணையவழி சேவைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் இதன் மூலம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நில ஆவணங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகள் மற்றும் வரைபடங்கள் அனைத்தும் எதிர்வரும் காலத்தில் பொதுமக்கள் எங்கிருந்து கொண்டும் அச்சு அலுவலகங்களுக்கு வராமலேயே இணையதளம் மூலம் இந்த சேவைகளை பயன்படுத்தி பலன் பெற முடியும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர்  டாக்டர்.கே.எஸ்.பழனிச்சாமி,  அவர்கள் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர்  டாக்டர்.கே.எஸ்.பழனிச்சாமி,  அவர்கள்  பயனாளிகளுக்கு நகர்ப்புற பகுதியில் இணையவழி மூலம் பட்டா வழங்கும் சேவையினை மாவட்ட கலெக்டர் அலுவலக  கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் துவக்கி வைத்து 4 பயனாளிகளுக்கு இணைய வழிப்பட்டாக்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அ.கண்ணப்பன், தேசிய தகவலியல் மைய தகவலியல் அலுவலர் எம்.கண்ணன், திருப்பூர் (வடக்கு) வட்டாட்சியர், திருப்பூர் (தெற்கு) வட்டாட்சியர், நில அளவை பராமரிப்பு ஆய்வாளர் பி.சசிக்குமார், தொழில்நுட்ப மேலாளர் வே.முத்துராஜா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து