பள்ளி மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்: மாவட்ட நீதிபதிகள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      திருவண்ணாமலை
photo01

 

திருவண்ணாமலை அடுத்த ஹெப்ரான் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று நடைபெற்றது.இம்முகாமிற்கு வந்த அனைவரையும் பள்ளியின் தாளாளர் பிடிஎல். சங்கர் வரவேற்றார். முகாமில் கலந்து கொண்ட மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி கே.ராஜ்மோகன், கல்வி உரிமைச் சட்டங்கள், குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்கினார்.

விழிப்புணர்வு முகாம்

அதனைத் தொடர்ந்து தலைமை குற்றவியல் நீதிபதி ஆர்.நாராஜா அடிப்படை சட்டங்கள், மோட்டார் வாகன சட்டம் குறித்து விளக்கி பேசினார். இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி பேசுகையில்,குழந்தைகள் பாடத்தை கற்பதோடு மட்டுமல்லாமல், வரலாறு, சமூகம் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும் என்றும், குழந்தைகளை பாதுகாக்கிற இளம் சிறார் சட்டம், குழந்தைகளுக்குள்ள அடிப்படை உரிமைகள் குறித்தும் விளக்கி பேசிய அவர், சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது. அப்படி ஓட்டினால் பாதுகாவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.

இந்த முகாமில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலர் சிவா, வழக்கறிஞர் பாசறை பாபு, ஒருங்கிணைப்பாளர் சையத் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் தமிழ்வேந்தன், யோபு, அருள், ராஜேஷ், சபினா, ரேவதி, செலின், இலக்கியா ஆகியோர் செய்திருந்தனர்.முடிவில் பள்ளி முதல்வர் திலகவதி மனோகரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து