பள்ளிக் கல்வித்துறையில் 199 இளநிலை உதவியாளர்கள் - 125 தட்டச்சர்கள் நியமனம் ஆணைகளை முதல்வர் எடப்பாடி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      தமிழகம்
cm edapadi appointment 2017 11 14

சென்னை : பள்ளிக் கல்வித்துறையில் 199 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 125 தட்டச்சர்கள் நியமன ஆணைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

முதல்வர் வாழ்த்து

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 199 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 125 தட்டசர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.

ஆணைகள் வழங்க...

மீதமுள்ள நபர்களுக்கும், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களாலும், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் நியமனம் செய்யப்பட்ட தட்டசர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களாலும் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குநர் இளங்கோவன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து