7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: திருச்சி, கோவை காவல்துறை ஆணையர்கள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      தமிழகம்
TN Govt 2017 7 1

சென்னை : தமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். கோவை, திருச்சி காவல்துறை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் விபரம் வருமாறு:

1. சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இருந்த பெரியய்யா, கோவை மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.


2. கோவை மாநகர ஆணையராக இருந்த அமல்ராஜ், திருச்சி காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

3. திருச்சி காவல் ஆணையாராக இருந்த அருண், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

4. உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த ஜி.வெங்கட்ராமன், சென்னை தலைமையிட நிர்வாக ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

5. சென்னை தலைமையிட நிர்வாக ஐஜியாக பொறுப்பில் இருந்த தினகரன், ஐஜி சென்னை செயலாக்கம் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

6. மத்திய அரசுப் பணியில் இருந்த சோனல்.வி.மிஸ்ரா காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

7. உத்தரப்பிரதேச எஸ்பியாக இருந்த அமானட்மன் , தமிழக பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டு சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து