விமான பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிசினஸ் கிளாசில் பயணிக்க அனுமதி

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      விளையாட்டு
BCCI 2017 5 7

புதுடெல்லி : உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் திகழ்கிறது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளுக்கு விமானத்தில் பயணிக்கும் பொழுது அவர்களுக்கு எகனாமி கிளாஸ் டிக்கெட் வழங்கப்படுகிறது.

வீரர்கள் புகார்

இதனால் வீரர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும், உடன் பயணிக்கும் சக பயணிகள் செல்ஃபி எடுத்துக் கொள்ளக்கூறி அன்பு தொல்லைகள் கொடுப்பதாகவும், ஒரு சில வீரர்கள் உயரமாக இருப்பதால் கால்களை நகர்த்தி அமர்வதில் பிரச்சினைகள் இருப்பதாகவும் கிரிக்கெட் வாரிய உயர்மட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

பிசினஸ் கிளாஸ்

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவிடம் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தின் போது கோரிக்கை வைத்தார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விமான பயணத்தின் போது பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வழங்க பி.சி.சி.ஐ நிர்வாகக்குழு அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோருக்கு மட்டுமே பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் அனைத்து வீரர்களும் பிசினஸ்  கிளாஸில் பயணம் செய்ய முடியும். 

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து