இலங்கை வீரர்களுக்கு அஸ்வின் பந்துவீச்சு சவாலாக இருக்கும் - விக்கெட் கீப்பர் விர்த்திமான் சகா பேட்டி

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      விளையாட்டு
wicketkeeper saha 2017 11 14

கொல்கத்தா : பந்துவீச்சில் அஸ்வின் மற்றவர்களை விட சிறப்பானவர் எனவே அவர் இலங்கை வீரர்களுக்கு மிகுந்த சவால் அளிப்பார் என விக்கெட் கீப்பர் விர்த்திமான் சகா கூறியுள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வருகிற 16-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் ஈடன்கார்டன் மைதானத்தில்  தீவிர பயிற்சியை தொடங்கினர். பயிற்சிக்கு பிறகு விக்கெட் கீப்பர் விர்த்திமான்சகா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தயார் நிலையில் ...


இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்குவதே எங்களது முதல் இலக்காகும். அந்த உத்வேகத்துடன் தொடரையும் கைப்பற்ற முயற்சிப்போம். ஒவ்வொரும் டெஸ்டும் முக்கியமானது. ஆட்டங்கள் வெவ்வேறு சவால் மற்றும் வித்தியாசங்களை கொண்டு இருக்கும். எனவே எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருப்போம். இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்டால் அடுத்து வரும் தென் ஆப்பிரிக்கா தொடரை நம்பிக்கையுடன் சந்திக்க இயலும்.

சவால் அளிப்பார்

பந்துவீச்சில் அஸ்வின் மற்றவர்களை விட சிறப்பானவர். அதிகமான மாறுபாடுகளை வெளிப்படுத்துவார். எனவே அவர் இலங்கை வீரர்களுக்கு மிகுந்த சவால் அளிப்பார். வேகப்பந்து வீரர்களான முகமது‌ஷமி, இஷாந்த்சர்மா ஆகியோரது பந்துவீச்சை விக்கெட் கீப்பராக நானும் கவனமுடன் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. பேட்டிங்கை பொறுத்த வரை பவுலர்களின் கையில் இருந்து பந்துவிடுபடும் நேரத்தை கணித்தாலே 50 சதவீத பணி முடிந்துவிடும். அதை தொடர்ந்து அந்த பந்து எவ்வாறு பவுன்ஸ் ஆகிறது, திரும்புகிறது என்பதை அறிந்து அதை எதிர்கொள்ள வேண்டும். இலங்கை அணியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து