முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் 'யோகா' விளையாட்டின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பு

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

ரியாத்: 'யோகா' வை விளையாட்டின் ஒரு பகுதியாக அங்கீகரித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச யோகா தினம்
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார். சர்வதேச யோகா தினம் கொண்டாட வேண்டும் என ஐ.நா. சபைக்கு கோரிக்கை விடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து, மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சரவதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

யோகாவுக்கு அங்கீகாரம்
இதுவரை சவுதி அரேபியா அரசு யோகாவை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வந்தது. இந்நிலையில், சவுதி அரசு யோகாவை சிறந்த பயிற்சியாக ஏற்றுள்ளது. விளையாட்டின் ஒரு அங்கமாக யோகாவை  அங்கீகரித்துள்ளது. இதற்கான உரிமம் சவுதி அரசிடம் இருந்து பெறப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து