முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 530 ஆக உயர்வு

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

டெக்ரான், ஈரான் - ஈராக் எல்லைப்பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 530-ஆக அதிகரித்துள்ளது.

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையிலும் திங்கட்கிழமை 7.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ஈராக் குர்திஸ் தானில் ஹாலாப்ஜாவை மையமாக கொண்டு இந்த பூகம்பம் உருவானது. இதில் மேற்கு ஈரானில் உள்ள சார்போல்-இ-‌ஷகாப் நகரில்தான் பலத்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது கெர்மான்ஷா மாகாணத்தில் ஈராக் எல்லையில் உள்ளது.

ஈரானை ஒப்பிடுகையில் ஈராக்கில் பாதிப்புகள் மிக குறைவு. இங்கு எல்லைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எல்லையில் உள்ள அணை சேதம் அடைந்துள்ளது. இது உடையும் அபாய நிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஈரான் மற்றும் ஈராக் பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஈரானில் மட்டும் 500 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களும், எல்லைப் பாதுகாப்பு படையினரும் அடங்குவர். ஈரானில் 30 பேர் பலியாகி உள்ளனர். இங்கும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து