முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவுக்கு சிறப்பு தூதரை அனுப்ப சீன அரசு முடிவு

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், வடகொரியாவுக்கு எதிராக விரைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப வலியுறுத்தியுள்ள நிலையில், வடகொரியாவுக்கு சிறப்பு தூதரை அனுப்ப சீன அரசு முடிவு செய்துள்ளது.

அணு ஆயுத சோதனை

வடகொரியா உலகநாடுகளின் கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாது தொடர்ந்து அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால், வடகொரியாவுக்கு எதிராக உலக நாடுகளை  ஒன்று திரட்டி ஆதரவு பெறும் முயற்சியில் தீவிரமாக டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆசிய சுற்றுப்பயணத்தின் போது இந்த முயற்சிகளை மேற்கொண்டார்.

டிரம்ப் வலியுறுத்தல்

சீனா பயணம் மேற்கொண்ட டொனால்டு டிரம்ப், அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங்கிடம், வடகொரியாவுக்கு எதிராக விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.  இந்த நிலையில், வடகொரியாவுக்கு சிறப்பு தூதரை அனுப்ப சீன அரசு முடிவு செய்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு தூதர் சாங் டோ, வடகொரியாவுக்கு செல்ல உள்ளார். ஆனால், மேற்கொண்டு எந்த தகவலையும் இது குறித்து சீன தரப்பில் வெளியிடப்படவில்லை.

வர்த்த கூட்டாளியாக...

வடகொரியாவின் நட்பு நாடாக சீனா அறியப்படுகிறது. மிகப்பெரிய வர்த்த கூட்டாளியாகவும் சீனா திகழ்கிறது. 2015-ம் ஆண்டுக்கு பிறகு கேபினட் அந்தஸ்துடன் உள்ள ஒரு சீன அதிகாரி வடகொரியாவுக்கு செல்வது இதுதான் முதல்தடவையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து