முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

233 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஜிஎஸ்டியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் குறிப்பாக அனைத்து ஹோட்டல்களிலும் 5 சதவிகித ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் நடைமுறையும் அடங்கும். மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் கடந்த 10-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 233 பொருட்களுக்கு வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என 4 வகைகளில் விதிக்கப்பட்டுள்ளன. இந்த முறையால் சில பொருட்களுக்கான வரி ஏற்கனவே இருந்ததை விட அதிகரித்தது. இதனால் அந்த பொருட்களின் விலை உயர்ந்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மக்கள் மத்தியிலும் விலை உயர்வு எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் கடந்த 10-ம் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 233 பொருட்களுக்கு வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இதில் அனைத்து வகை ஓட்டல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 180 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 28 சதவீத வரி தற்போது குறைக்கப்பட்டுள்ளது. 80 சதவீத பொருட்கள் 28 சதவீதத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 1-ம் தேதி 250 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 28 சதவீத வரி தற்போது 50 பொருட்களுக்கு மட்டும் உள்ளது. சிகரெட் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீதம் வரி உள்ளது. இதனால் ஜி.எஸ்.டி. வரியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சாக்லெட், மரச்சாமான்கள், சோப்பு, அழகு சாதனப் பொருட்கள், ஷாம்பு, மார்பிள், டைல்ஸ், டி.வி., வானொலி உள்ளிட்ட 178 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 28 சதவீதம் வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கிரைண்டர், பீரங்கி வாகனம், பதப்படுத்தப்பட்டுள்ள பால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, அச்சக மை, விவசாய எந்திரம் உள்ளிட்ட 13 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடலை மிட்டாய், பொறி உருண்டை, உள்ளிட்ட 6 பொருட்களுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி வலைகள், ஆடைகள், கயிறு உள்ளிட்ட 8 பொருட்களுக்கான வரி, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உலர வைக்கப்பட்ட காய்கறி, பதப்படுத்தப்பட்ட மீன் உள்ளிட்ட 6 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவீதம் வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்தன. ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்ட 132 நாட்களில் 213 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து