முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியதில் எந்த தவறு இல்லை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கருத்து

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

கோவை: தமிழக கவர்னர், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியதில் எந்த தவறு இல்லை என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை சென்றார். பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிறகு  கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.   3 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் கோவை மாவட்டத்தில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.

தூய்மை இந்தியா பணி...
இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், ஆளுநர் ஆய்வு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் நேற்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்ற ஆளுநர், அங்கு தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மேலும், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மை பணியிலும் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியின் போது உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் உடன் கலந்து கொண்டார்.

கோவை நகருக்கு பாராட்டு
பின்னர், காந்திபுரத்தில் நடந்த தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர்  கோவை நகரை வெகுவாக பாராட்டினார். மேலும் கலெக்டரையும், அமைச்சர் வேலுமணியையும் பாராட்டினார்.ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறுகையில், “   தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சி அடையும். கோவை மாவட்டம் 89.23 சதவீதம் கல்வி அறிவு பெற்றுள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும். கோவை பஸ் நிலையத்தில் சுகாதார பணிகள் மற்றும் கழிப்பறைகள் சிறப்பாக உள்ளன.

அரசை பாராட்ட முடியும்
கொங்கு தமிழுடன் கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அகமும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். களத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும்” என்றார்.

எந்த தவறு இல்லை
இது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியது கோவை மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்தான். இதில் எந்த தவறு இல்லை. இந்தக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்துதான் விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு மத்திய அரசின் திட்டங்கள் வேகமாகக் கிடைக்க, ஆளுநருடன் இணைந்து செயல்படுவது ஆரோக்கியமானதுதான். இதை மாநில நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகக் கருத முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து