முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதியிடம் விருது பெற்ற கிருஷ்ணகிரி மாணவர் ஆகாஷூக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து கடிதம்

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே அறியக்கூடிய சிறிய கருவியை கண்டுபிடித்து ஜனாதிபதியின் சாதனை குழந்தைக்கான தேசிய விருது பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் மனோஜூக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த ஆகாஷ் மனோஜூக்கு, ஜனாதிபதி சிறந்த சாதனை புரிந்த குழந்தைக்களுக்கான தேசிய விருது வழங்கியதையடுத்து அனுப்பிய வாழ்த்து கடிதத்தின் விபரம்.,

மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே அறியக் கூடிய சிறிய கருவியை புதியதாககண்டுபிடித்த தங்களுக்கு, ஜனாதிபதியால் சிறந்த சாதனை புரிந்த குழந்தைக்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்த விருதினை பெற்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் வருங்காலங்களிலும் இதுபோன்று பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, மேலும் பல விருதுகளை பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் செழியனுக்கு ஜனாதிபதி ராஜீவ்காந்தி மானவ் சேவா விருது வழங்கியதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வாழ்த்து கடிதத்தின் விபரம் வருமாறு:-

குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தைகளை பிச்சையெடுத்தலில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளித்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானவன் முறைகளிலிருந்து பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் தங்களின் பணியினை அங்கீகரித்து, ஜனாதிபதியால், ராஜீவ்காந்தி மானவ் சேவா விருது வழங்கப்பட்டதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதினை பெற்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் வருங்காலங்களிலும் தன்னார்வ சேவையில் சிறப்பாக சேவையாற்றி, பலவிருதுகளை பெற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து