முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

பெய்ஜிங் : சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றி பெற்றார்.

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் பிரதான சுற்று போட்டிகள் புஸ்கோவ் நகரில் நேற்றுதொடங்கியது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், அமெரிக்காவின் பெய்வென் ஸாங்கை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் சுற்றை சாய்னா 21-12 என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் அதிரடியாக விளையாடிய சாய்னா அந்த சுற்றையும் 21-13 என கைப்பற்றினார். இதன்மூலம் 21-12, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சாய்னா இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் லியூ - ஸாங் ஜோடியுடன் மோதியது. இப்போட்டியில் சீனா ஜோடி 21-13, 21-13 என்ற செட்களில் இந்திய ஜோடியை  வீழ்த்தியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து