முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் அம்பானி குடும்பம்

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

இத்தாலி, போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியிலில் முகேஷ் அம்பானி குடும்பம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 680 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆசியாவின் முதல் 10 இடத்தை பிடித்துள்ள உலக பணக்காரர்கள் பட்டிலை போர்ப்ஸ் பத்தரிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியாவின் முன்னணி குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.1,25,400 கோடியில் இருந்து 2,95,680 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இரண்டாவது இடத்தில், தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலெட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தின் சொத்து ரூ.73,920 கோடி ரூபாயில் இருந்து 2,69,280 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மூன்றாவது இடத்தில், ஹாங்காங்கை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவோக் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2,66,640 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நான்காவது இடத்தில் தாய்லாந்தின் சரோவனோட் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2,41,560 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.  10-க்கும் மேற்பட்ட பட்டியலில் பல இந்திய குடும்பங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து