முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணமதிப்பிழப்பால் ரூ.3.75 லட்சம் கோடி நஷ்டம் முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேதனை

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பணமதிப்பிழப்பால் ரூ.3.75 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த முறையை கடந்த 700 ஆண்டுகளுக்கு முன் துக்ளக் செய்திருந்தார் என்றும் பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இது நடைபெற்று ஓராண்டு ஆன நிலையிலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவத்துடன் பணமதிப்பிழப்பை ஒப்பிட்டு பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார். இது தொடர்பாக சின்ஹா கூறுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பேரரசர்கள், முடியரசர்கள் மற்றும் அரசர்கள் எடுத்ததாக வரலாற்றில் படித்திருக்கிறோம்.

கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பேரரசர் இருந்தார். அவர் புதிய கரன்சியை அறிமுகப்படுத்தி பழைய கரன்சிகளுக்கு முடிவு கட்டினார். எனவே பணமதிப்பிழப்பு என்பது 700 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றது. அந்த பேரரசரின் பெயர் முகமது பின் துக்ளக். அவர் தனது தலைநகரத்தை டெல்லியிலிருந்து தௌலதாபாத்துக்கு மாற்றினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆர்.பி.ஐ ஆளுநரோ அல்லது நிதி அமைச்சரோ அறிவிப்பதற்கு பதில் பிரதமர் மோடியாகவே முடிவு செய்து அதை அறிவித்ததால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு பணமதிப்பிழப்புக்கு பிறகு அவர் பேசிய நீண்ட உரையில் 74 முதல் 75 முறை கருப்பு பணம் என்பதை குறிப்பிட்டார். கள்ள நோட்டுகள் மற்றும் தீவிரவாதம் பற்றி மட்டுமே குறிப்பிட்ட மோடி அதில் டிஜிட்டல் மற்றும் ரொக்கமில்லா பொருளாதாரத்தை குறித்து குறிப்பிடவில்லை. பணமதிப்பிழப்பால் நாட்டுக்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதுஎன்றார்  யஷ்வந் சின்ஹா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து