முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. குறைந்த பிறகும் விலையை குறைக்காத பெரிய ஹோட்டல்கள்

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜி.எஸ்.டி வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஹோட்டல்களோ விலையை குறைக்காமல் வழக்கமான விலையில் வாடிக்கையாளர்கள் தலையில் விலையேற்றத்தை கட்டி லாபம் சம்பாதிக்கின்றன.

கவுகாத்தியில் சமீபத்தில் நடைபெற்ற 23வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வரி மாற்றர முடிவுகளின்படி, ரெஸ்டாரம்டுகளின் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் பில் 118 ரூபாயாக இருந்த நிலையில், அது நவம்பர் 15ம் தேதி, திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி அறிமுகமான நாளில் இருந்து, ரூ.105 என குறைக்கப்பட வேண்டும்.
மாற்றப்பட்ட ஜி.எஸ்.டி வரிப்படி சில ஹோட்டல்கள் நேற்று முதல் பில் தொகையை குறைக்க ஆரம்பித்துவிட்டன. பல பேர் தாங்கள் சாப்பிட்ட உணவுக்கான பில்லை, சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து