ஈரோடு மாவட்டம் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் , கே.சி.கருப்பணன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் 788 நபர்களுக்கு ரூ.10.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      ஈரோடு
15 11 2017 ph 1

ஈரோடு மாவட்டம்,  மல்லிகை அரங்கில் இன்று (15.11.2017) ‘உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்,  தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.செல்வகுமாரசின்னையன் (ஈரோடு), திருமதி.வி.சத்தியபாமா (திருப்பூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்கள், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பயனாளிகள் என 785 நபர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10.28 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்கள்.

இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தெரிவித்ததாவது

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா  கூட்டுறவு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலுமே வறட்சி ஏற்பட்டால் நிவாரணம் வழங்கியதில்லை. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா  விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியுள்ளார்கள். மேலும் விவசாயிகளின் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு வசதியாக பயிர் காப்பீட்டு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பால் கூட்டுறவு சங்கங்கள் சிறந்த சங்கங்களாக செயல்பட்டு மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவு துறையின் மூலமாக கடன் வாங்கும் நிலைகள் மாறி பல்வேறு மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா  வழியில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளின் நலனுக்காக ஏரி, குளங்களை தூர்வாரப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய நலத்திட்டங்களை வழங்கும் அரசிற்கு உறுதுணையாக இருப்பதோடு, இக்கூட்டுறவுச் சங்கங்கள் மேன்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
 
இவ்விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் கே.சி.கருப்பணன்  பேசியதாவது,

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று சிறப்பான முறையில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள் என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா  வேளாண் தொழிலை மேற்கொண்டுள்ள உழவர் பெருமக்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் என அனைவருக்கும் தேவையான அனைத்தும் கிடைக்க சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். விவசாய கடன் பெற்ற விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு  சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்கடன், நடுத்தர கால வேளாண்மை கடன் மற்றும் பண்ணை சார்ந்த நீண்டகால கடன் என அனைத்தும் தள்ளுபடி செய்துள்ளார்கள்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா  பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி ரூ.25,000 முதல் ரூ.25 இலட்சம் வரை கடனுதவி மற்றும் 3-ல் ஒரு பங்கு மானியம் வழங்கி  வருமானம் ஈட்டிட வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள். விவசாயிகளுக்கு பூஜ்ஜிய சதவீதம் வட்டி முறையில் பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கம் மாநில அளவில்   2-ம் இடம் பெற்றுள்ளது.  இன்றையதினம் கடனுதவிகள் பெறும் பயனாளிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கடனுதவிகளை பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ளமாறு வாழ்த்துகிறேன் என அனைவரும் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

இவ்விழாவில் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  தெரிவித்ததாவது,

 மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா  கூட்டுறவு துறையின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசியினை வழங்கி  வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருவருக்காக” என்ற கொள்கையினைத் தாரக மந்திரமாகக் கொண்டது கூட்டுறவு அமைப்பாகும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து சேவைகளையும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு அரசின் அனைத்து திட்டங்களும் நன்முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்கு பயிர்கடன், உரம், விவசாய இடுபொருட்கள், வேளாண் கருவிகள் ஆகியன வழங்கப்படுகின்றன. மகளிருக்கு சிறுவணிகக் கடன், தொழில் முனைவோர் கடன், சுய உதவிக்குழு கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், சுய தொழில் கடன் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயம், கால்நடை சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், மீன் மற்றும் கால்நடை பராமரிப்பு சங்கம் ஆகிய சங்கங்களின் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா  பதவி பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமாக விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா  வழியில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மழைக்காலங்களில் நீரை சேமித்திட அந்தந்த மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள் மூலம் விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காக ஏரிக்குளங்களை தூர்வாரிட உத்திரவிட்டார்கள். இதனால் மழை நீர் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.பொதுமக்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அரசு வழங்கும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை  பெற்று பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிவையொட்டி, பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், பல்வேறு கடன் திட்டத்தின் கீழ் 788 பயனாளிகளுக்கு ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் கடன் பெறுவதற்கான காசோலைகளை      மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல்        துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் வழங்கினார்கள்.

முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆவின், மத்திய கூட்டுறவு வங்கி, இப்கோ, கிரிப்கோ, வேளாண் உற்பத்தி, சிந்தாமணி, கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். மேலும் விழாவில் பங்கேற்வர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
 
இவ்விழாவிற்கு பொது மேலாளர் /மாவட்ட வருவாய் அலுவலர் (ஆவின்) திருமதி.வே.லதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.இராமசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வி.தெய்வநாயகம், தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை தலைவர் எம்.ஜி.பழனிசாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளம் தலைவர் எஸ்.ஆர்.சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகன், கூட்டுறவு சங்கங்கள், துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து