முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலககோப்பை கால்பந்து போட்டி : நியூசிலாந்தை வீழ்த்தி பெரு தகுதி

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

லிமா - உலககோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி கடைசி அணியாக தகுதி பெற்றுள்ளது.

தகுதிச்சுற்று ஆட்டங்கள்

     21-வது உலககோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரஷ்யாவில் நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் ரஷியா மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 அணிகளும் தகுதி சுற்று மூலமே நுழைய இயலும். உலககோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி தொடங்கியது. இதில் 6 கண்டங்களில் இருந்து 210 நாடுகள் விளையாடின. 30 நாடுகள் நேற்று வரை தகுதி பெற்றன. இன்று காலை கடைசி அணியாக தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த பெரு உலககோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

பெரு அணி தகுதி

    லிமா நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இரு அணிகள் மோதிய முதல் சுற்று ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. 2-வது சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் பெரு அணி தகுதி பெற்றது. அந்த அணி 5-வது முறையாக உலக கோப்பைக்கு நுழைந்துள்ளது. பெரு 36 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 1982-ம் ஆண்டு உலககோப்பையில் ஆடி இருந்தது. அடுத்த ஆண்டு நடைபெறும்.

உலககோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் 32 நாடுகள் விவரம்:    

ரஷ்யா (போட்டியை நடத்தும் நாடு), பிரேசில் (5 முறை சாம்பியன்), ஈரான், ஜப்பான், மெக்சிகோ, பெல்ஜியம், தென்கொரியா, சவூதி ஆரேபியா, ஜெர்மனி (4 முறை சாம்பியன்), இங்கிலாந்து (1 முறை சாம்பியன்), ஸ்பெயின் (1 தடவை சாம்பியன்), நைஜீரியா, கோஸ்டாரிகா, போலந்து, எகிப்து, ஐஸ்லாந்து,
    செர்பியா, போர்ச்சுக்கல், பிரான்ஸ் (ஒரு முறை சாம்பியன்), உருகுவே (2 தடவை சாம்பியன்), அர்ஜென்டினா (2 முறை சாம்பியன்), கொலம்பியா, பனாமா, செனகல், மொராக்கோ, துனிசியா, சுவிட்சர்லாந்து, குரோஷியா, சுவீடன், டென்மார்க், ஆஸ்திரேலியா, பெரு.
இதில் பனாமா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முதல் முறையாக உலக கோப்பையில் ஆடுகின்றன. 4 முறை சாம்பியனான இத்தாலி, நெதர்லாந்து, சிலி, அமெரிக்கா, கானா போன்ற முன்னணி நாடுகள் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.

      உலககோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் 32 நாடுகளும் எந்தந்த பிரிவில் இடம் பெறும் என்பதற்காக குலுக்கல் (டிரா) டிசம்பர் 1-ந்தேதி நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து