முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதை அதிபர் டிரம்ப் நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது: அமெரிக்க எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை டிரம்ப் நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து கருத்தரங்கத்தில் வியாழக்கிழமையன்று அமெரிக்க பாதுகாப்பு கொள்கைச் செயலாளர் ரூட் கூறியபோது, “பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை டிரம்ப் நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது. ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் தாலிபன்களுக்கு எதிராக நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தானில் செயல் பெரும் குறைப்பாடாக உள்ளது. இதுவரை ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 2,000 அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்" என்றார்.

மற்றுமொரு பாதுகாப்புத் துறை அதிகாரி கூறியபோது,

பாகிஸ்தானுடன் ஐ.எஸ் தீவிரவாதிகள், அல் கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளை தோற்கடிப்பது உள்ளிட்ட பரஸ்பர நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அமெரிக்கா ஒரு ஆக்கபூர்வமான உறவை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் நேர்மறையாக அணுசக்தி திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் அதன் பிராந்தியத்தில் தீவிரவாத குழுக்களுக்கு புகலிடம் அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானின் நலன்களில் நாங்கள் தீவிர அக்கறை கொண்டுள்ளோம்” என்றார். முன்னதாக, பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது எனக்கு தெளிவாக விளங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து