முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சிக்காக வந்து பணத்தை திருப்பிக் கொடுக்கும் நடிகர் கமல்ஹாஸன்

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: கட்சிக்காக வந்துள்ள பணத்தை திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்  நடிகர் கமல் ஹாஸன்.

கமல் ஹாஸன் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார். கட்சி நடத்த மக்கள் பணம் தருவார்கள் என்றார். இதையடுத்து கமல் நற்பணி மன்றத்தினர் ரூ. 30 கோடி வசூலித்துள்ளனராம்.

இது போக மக்களும் கமலுக்கு பணம் அனுப்பி வருகிறார்கள். அதை எல்லாம் கமல் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள் என்று நான் சொன்னதை "ரசிகர்கள் கொடுப்பார்கள்" என்று ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எனவே எனது நற்பணி மன்ற நிர்வாகிகளும், மக்களும் குழம்பி விடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்.

எனக்கு கடிதங்கள், பணம் வரத் தொடங்கி விட்டது. ஆனால் நான் இப்போது பணம் வாங்கினால், அது சட்ட விரோதமாகிவிடும். அதை நான் விரும்பவில்லை. எனக்கு வந்துள்ள பணத்தை நான் வெறுமனே சும்மாவும் வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆகையால் அந்த பணத்தை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

எனது இந்த செயலால் நான் பணத்தை வாங்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. முன் வைத்த காலை பின் வைத்து விட்டேன் என்றும் அர்த்தம் இல்லை. கட்சித் தொடங்குவதற்கான சரியான கட்டமைப்பு இல்லாமல் அந்த பணத்தைத் தொடக்கூடாது.

இப்போதைக்கு அந்த பணத்தை என்னுடைய பணம் என்று நினைத்து நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதற்குள் நீங்கள் அந்த பணத்தைத் செலவு செய்து விட்டால், அதற்கான பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்.

நீங்கள் பணம் அனுப்பிய அன்றே கட்சி உருவாகி விட்டது. ஆனால் கட்ட மைப்பு சரியாக இருக்க வேண்டும். இப்போது சில இயக்கங்களில் நடக்கும் குளறு படிகள் போல நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பணத்தை திருப்பி அனுப்புகிறேன் என கமல் விளக்கம் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து