முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி, ஓசூர் நகராட்சிகுட்பட்ட டி.வி.எஸ்.நகர் அருகே உள்ள ஜவகர் நகர் பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார தூய்மை பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் மற்றும் ஓசூர் நகராட்சிகுட்பட்ட டி.வி.எஸ்.நகர் அருகே உள்ள ஜவகர் நகர் பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார தூய்மை பணிகளை கலெக்டர் சி.கதிரவன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு தூய்மைற்ற அங்காடிகள் மற்றும் வீடுகளுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

அபராதம்

முன்னதாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை தீடீர் ஆய்வு மேற்கொண்டு பேருந்து நிலையில் உள்ள உணவகங்கள், தேனீர் கடைகள், மற்றும் சிறு அங்காடிகளில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் தொட்டிகள் மற்றும் சுகாதாமற்ற முறையில் இருந்த பழைய இட்டிலி மாவு ஆகியவற்றை உடனடியாக அகற்ற சுகாதார துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டு 4 -அங்கடிகளுக்கு தலா ரூ. 5000 அபராதம் என மொத்தம் ரூ.20,000 அபராதம் வசூலிக்கவும், கடைகளை மூட உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஓசூர் நகராட்சிக்குட்பட்ட டி.வி.எஸ். நகர் அருகே உள்ள ஜவகர் நகர் பகுதி குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக சென்று குடிநீர் தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், மற்றும் வீட்டின் மேற் பகுதியில் தேவையற்ற பழைய பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் டெங்கு உருவாக்கும் லார்வா புழுக்கள் இருந்ததையடுத்து அக்கட்டிட உரிமையாளருக்கு ரூ. 1- லட்சம் அபராதம் விதிக்கவும், தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் நீர் தேக்க தொட்டிகளை சுகாதரமற்ற முறையில் வைத்திருந்த 8 வீட்டு உரிமையாளர்களுக்கு தலா 1000 வீதம் என மொத்தம் ரூ.8000 ஆயிரம் அபராதம் என மொத்தம் கிருஷ்ணகிரி, ஓசூர் நகராட்சி பகுதியில் நேற்று மட்டும் ரூ. 1 லட்சத்து 28 - ஆயிரம் அபராதம் விதிக்க கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

இவ்வாய்வின் போது துணை இயக்குநர் ( சுகாதார பணிகள்) டாக்டர் பிரியாராஜ், ஓசூர் நகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், ஒசூர் வட்டாட்சியர் பூசனகுமார், கிருஷ்ணகிரி நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து