வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு ரூ.16,93,200- மதிப்பில் ரூ.7,42,500 மான்யத்திலான பவர் டிரல்லர்கள்: கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      வேலூர்
1 a

 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகள் கூட்டம்

இக்குறைதீர்வு நாள் கூட்டத்தில் வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வனத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கால்நடைத்துறை, பட்டுவளர்ச்சித் துறை போன்ற பல்வேறு துறைகளில் விவசாயிகள் தங்கள் குறைகளை கூட்டத்தில் தெரிவித்தனர். இதற்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விளக்கத்தினை அளித்தனர். மேலும் இக்கூட்டத்தில் 40ற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 35 மனுக்களுக்கு பதில்கள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரின்; வளாகத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு ரூ.16 இலட்சத்து 93 ஆயிரத்து 200ஃ- மதிப்பில் ரூ.7 இலட்சத்து 42 ஆயிரத்து 500ஃ- மான்யத்துடன் கூடிய பவர் டிரல்லர்களை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார். இதனை தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பயிர்களை காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீகாந்த், ., கூட்டுறவு இணைப் பதிவாளர் திருகுணஐயப்பதுரை, இணை இயக்குநர் (வேளாண்மை) வாசுதேவரெட்டி, மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், உதவி இயக்குநர் (பட்டு வளர்ச்சி) சுப்பிரமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புலட்சுமி, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து