Idhayam Matrimony

சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளி 34-வது ஆண்டுவிழா

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      சேலம்

 

புராணா இதிகாசங்களில் லவன் குசன் இருவரும் குருவிடம் எப்படி வாழ்ந்து வந்தார்களோ அதேபோல மாணவிகள் தங்களது பள்ளிக்காலத்தில் குருவாகிய ஆசிரியர்களிடம் நன்கு கற்று முன்னேற வேண்டும் என்றும் சீதை நளாயினி போன்று மாணவிகள் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்று தபோவனம் இராமகிருஷ்ண மடத்தின் செயலர் ருத்ரனந்தா சுவாமிஜி அறிவுரை கூறினார்.

ஆண்டு விழா

சேலம் சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முப்பத்தி நான்காவது ஆண்டு விழா சாரதா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் விமலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சாரதா கல்லூரியின் இயக்குனர் யதிச்வரி வினாயக பிரியா, செயலாளர் யதிச்வரி சிவசக்திபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தபோவனம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் உப செயலர் ருத்ரபிரியா சுவாமிஜி மற்றும் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதானந்தா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், ஆண்டு விழாவில் பல்வேறு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், உதவி தொகையும் வழங்கினார்.

இதனை தொடர்ந்து மாணவிளின் புராண கதைகளான ராமாயணம் மற்றும் மகாபாரத இதிகாச நாடகங்கள் மற்றும் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

பின்னர் தபோவன ராமகிருஷ்ண மடத்தின் உப செயலர் ருத்ரானந்தா பேசும் போது புராண இதிகாசங்களில் உள்ள ராமாயணத்தில் வரும் கதாபாத்திரமான சீதை மற்றும் நளாயினி ஆகியோர் தங்களது வாழ்க்கையில் எவ்வளவு அமைதியாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ளுவது பற்றி மாணவிகள் நடித்து காட்டியது தத்ரூபமாக இருந்தது என்றும், அதேபோல மாணவிகள் வாழ்க்கையில் கற்பு நெறிகளை பின்பற்றி எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்றும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஆசிரியர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றால் புராண கதைகளில் லவன் குசன் ஆகிய சகோதரர்கள் குருவிடம் கல்வி கற்பிக்கும் போது குருவிற்கு செய்யும் பணிவிடைகள், மற்றும் கல்வி கற்கும் முறை பற்றி நன்கு அறிவீர்கள். அதேபோல மாணவிகளாகிய நீங்கள் பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர்கள் சொல்லும் செயலுக்கு ஏற்றார்போல நடந்து படிப்பில் முழு கவனம் செலுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மாணவ செல்வங்களாகிய நீங்கள் தான் நாளை உலகை ஆளக்கூடிய மிகப்பெரும் சக்தி என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து