முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முற்றிலும் பயன்படுத்த இயலாத மற்றும் இடித்து அகற்றப்பட வேண்டிய நிலையில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தகவல்

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் -விருதுநகர் மாவட்டத்தில் முற்றிலும் பயன்படுத்த இயலாத மற்றும் இடித்து அகற்றப்பட வேண்டிய நிலையில் உள்ள கட்டிடங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து கணக்கிட்டு, தற்போது பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை போன்ற துறைகளின் மூலமாக இடிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் புல்லலக்கோட்டை அங்கன்வாடி மைய கட்டிடம், பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், வடமலைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம், சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டிடம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தேனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், அல்லாளப்பேரி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், வெற்றிலைமுருகன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், எஸ்.மறைக்குளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், முடுக்கன்குளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், ஜோகில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், பி.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், பிசிண்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், நந்திக்குண்;டு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், மேலத்துலுக்கன்குளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், நந்திக்குண்டு அங்கன்வாடி மைய கட்டிடம், டி.செட்டிகுளம் கிராமத்தில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, டி.செட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், கல்குறிச்சி அங்கன்வாடி மைய கட்டிடம், கல்குறிச்சியில் இரண்டு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடங்கள், தோணுகால் அங்கன்வாடி மைய கட்டிடம், முஸ்ட்டக்குறிச்சியில் தொலைக்காட்சி அறை, குரண்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பம்ப் அறை, பந்தேனந்தல் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம், எஸ்.கல்லுப்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் பம்ப் அறை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ஆவியூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி கட்டிடம்,

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், வீரசோழன் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் விஜயரெங்காபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம், பி.திருவெங்கிடாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம், காக்கிவாடன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, சூரார்பட்டி பயணிகள் நிழற்குடை கட்டிடம், கனஞ்;சாம்பட்டி கிராமத்தில் புறம்போக்கில் கட்டப்பட்ட குடியிருப்பு இல்லாத கட்டிடம், மஞ்சள்ஓடைப்பட்டி பயணிகள் நிழற்குடை கட்டிடம், புலியடிப்பட்டி பயணிகள் நிழற்குடை கட்டிடம், மண்குண்டான்பட்டி அருகில் பாளடைந்த கட்டிடம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் பூவநாதபுரம் கிராமத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழு கட்டிடம், பூவநாதபுரம் பயணிகள் நிழற்குடை கட்டிடம், எரிச்சநத்தம் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை கட்டிடம்,

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சூரங்குடி பயணிகள் நிழற்குடை கட்டிடம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சேத்தூர் கிராமத்தில் உள்ள சாவடி கட்டிடம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தகவல் தொடர்பு மையக் கட்டிடம், அறிவொளி இயக்கப் கட்டிடம், அலுவலர்கள் குடியிருப்புக் கட்டிடம், திருச்சூழி ஊராட்சி ஒன்றியத்தில் மங்களுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம், அம்பனேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் என மொத்தம் இதுவரை 52 முற்றிலும் பயன்படுத்த இயலாத மற்றும் இடித்து அகற்றப்பட வேண்டிய நிலையில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. மேலும் முற்றிலும் பயன்படுத்த இயலாத கட்டிடம் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் தொடர்;ந்து இடிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து