நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் : கலெக்டர் கு.கோவிந்தராஜ் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      கரூர்
Karur 2017 11 17

கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட என்.எஸ்.கே.நகர், வெங்கமேடு, குளத்துப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நேற்று (17.11.2017) ஆய்வு செய்தார்.

கலெக்டர் அறிவுரை

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, இவ்வாய்வின்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ள கூடாது. இரண்டு சக்கர பழுதுநீக்குபவர்கள் பஞ்சர் பரிசோதிக்க உபயோகப்படுத்தும் தண்ணீரினை நாள்தோறும் மாற்றவும், உபயோகமற்ற இருசக்கர வாகனங்களை வருடக்கணக்காக நிறுத்தி வைக்கக் கூடாது. அவைகளை உடனே அப்புறப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைக்காரர்கள், டீ கடைக்காரர்கள், பழக்கடைக்காரர்கள், மளிகைக் கடைக்காரர்கள் குப்பைகளை உரிய இடத்தில் மட்டுமே போடவும், தங்களது கடைப்பகுதியை சாலையோரத்தில் விரிவாக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

உணவு விடுதிகளில் தங்களுக்கு தேவையான விறகுகளை சாலையோரத்தில் நீண்ட நாட்களாக சேமித்து வைக்கக்கூடாது. புதிய வீடு கட்டுபவர்கள் கட்டுமான பொருட்களை நீண்ட நாட்களாக சாலையோரங்களில் சேமித்து வைக்கக் கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகத்திற்காக திறந்து மூடும் வால்வு பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வழங்கப்படும் குடிநீரில் குளோரினேசன் அளவு நாள்தோறும் பரிசோதித்து பார்க்கவும் உரிய அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சாலையோரங்களில் குடிநீர் செல்லும் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்கள், வணிக இடங்களில் துhய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் அருள், பூச்சியியல் வல்லுநர்கள் மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து