முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் ரயில் பாலத்தில் புதிய தூக்குப்பாலம் அமைக்க தென்னக ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு.

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 

 ராமேசுவரம்,- ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூக்குப்பாலம் மற்றும் பாலத்தின் தன்மைகள் குறித்து நேற்று தென்னக ரயில்வே பாதுகாப்பு முதன்மை அதிகாரி ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். 

 

மண்டபம் பகுதியையும் ராமேசுவரம் தீவுப்பகுதியையும் இணைக்கும் வகையில் பாம்பன் பகுதி கடலில் 2 கி.மீட்டர் தொலைதூரத்தில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாலத்தில் கப்பல் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூக்கு பாலத்தை தன்மை இழந்து வருவதால் தூக்கு பாலத்தை அதி நவீன முறையில் ரூபாய் 28 கோடி 50 லட்சம் மதிப்பில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் எளிய முறையில் ரயில்வே ஊழியர்கள் திறந்து மூடும் வகையில் மின் இயந்திரம் மூலம் தூக்கும் முறையில் புதியதாக மாற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.அதுபோல தூக்கு பாலம் எந்த மாதிரியான வடிவமைப்பில் அமைப்பது என்பது குறித்தும் ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.அதன் அடிப்படையில் ரயில் தூக்கு பாலத்தை ஆய்வு செய்வதற்காகவும்,அதுபோல பாலத்தில் தண்டவாளம்,தண்டவாளத்தை தாங்கி நிற்கும் இரும்பு கட்டைகள்,இரும்பு கர்டர்கள்,அதுபோல சிமெண்ட் பில்லர்கள்,தூக்குபாலத்தை திறந்து மூடும் இயந்திரம் உல்பட தொழில்நுட்ப பகுதிகளின் தன்மையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தென்னக ரயில்வே பாதுகாப்பு முதன்மை அதிகாரி பிரேம்சந்த் பாம்பன் ரயில் நிலையத்திற்கு வெள்ளிக் கிழமை வருகை தந்தார்.அதன் பின்னர் அங்கிருந்து ட்ராலி மூலம் ரயில் பாலத்திற்கு சென்று ஆய்வுப்பணிகளை மேற்க்கொண்டார்.இந்த ஆய்வுப்பணியில் தண்டவாளம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பிரிவு,மின்சாரம் பிரிவு,தூக்குபாலம் பராமரிப்பு பிரிவு,தொழில்நுட்பத்துறை அதிகாரிகள்,எக்கோசவுன்ட் மற்றும் திறன் ஆய்வுப்பிரிவு பொறியாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து