முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      தேனி
Image Unavailable

  தேனி.--தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஜமீன்தாரினி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், மாவட்டத்திலுள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, மயிலாடும்பாறை, தேனி, போடிநாயக்கனூர், உத்தமபாளையம், சின்னமனூர் கம்பம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 78 மேல்நிலைப்பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலுகின்ற 10,646 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகளை இன்று (17.11.2017) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம்   மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.
இவ்விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு  பொதுமக்களிடமிருந்து பெறப்படும் வருவாயில் எதிர்கால மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டுகளில் 86 ஆயிரம் கோடி ரூபாயை கல்வித்துறைக்காக ஒதுக்கீடு செய்து கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழ்மையின் காரணமாக எந்தவொரு மாணவனும் கல்வியை தொடர முடியாத சூழ்நிலையை தவிர்ப்பதற்காகவும், கல்வி சார்ந்த திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஒரு மாணவனுக்குத் தேவையான கல்வி உதவித்தொகை, பேனா, பென்சில், நோட்டு, புத்தகம், புத்தகப்பை, வடிவியல் உபகரணங்கள், சீருடை, காலணிகள், விலையில்லா பேருந்து பயண அட்டை, மிதிவண்டிகள், போன்றவற்றை வழங்கியும், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும், கல்வி உதவித்தொகையாக ரூ.5000ஃ- வழங்கியும், மாணவ, மாணவிகள் உலகளாவிய அறிவை பெறுவதற்காகவும், தன் தனித்திறனை வளர்த்துக் கொண்டு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்காகவும், விலையில்லா மடிக்கணினியினை வழங்கி கல்வித்துறைக்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு  கல்வித்தாயாக திகழ்ந்து வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அரசு பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும அறிவியல் கல்லூரிகள் பாலிடெக்னிக் கல்லூரிகள் விவசாயக்கல்லூரிகள் மற்றும்  கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 76 கல்லூரிகள் திறக்கப்பட்டு தமிழகத்தில் கல்விப்புரட்சியை நிகழ்த்தி உள்ளார்கள். இதுபோன்ற தமிழக அரசின் கல்வி சார்ந்த திட்டங்களின் பயனாக நமது மாவட்டம் மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2015-16-ஆம் கல்வியாண்டில் 96.5 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதத்திலிருந்து, 2016-17-ஆம் கல்வியாண்டில் 97.1 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதமும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2015-16-ஆம் கல்வியாண்டில் 95.1 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதத்திலிருந்து, 2016-17-ஆம் கல்வியாண்டில் 95.9 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 78 பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலுகின்ற 10,646 மாணவ, மணாவியர்களுக்கு ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவ, மாணவியர்கள் தமிழக அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகின்ற கல்வி சார்ந்த திட்டங்களை நன்கு பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.
 இவ்விழாவில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  தி.வசந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தேனி பாராளுமன்ற உறுப்பினர்  ஆர்.பார்த்திபன்   கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  எஸ்.டி.கே.ஜக்கையன்   உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர்  சென்னியப்பன்   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்   ஜமீன்தாரினி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைவர்  வடமலைராஜபாண்டியன்   செயலர்  அய்யப்பராஜன்   தலைமையாசிரியர்  குமார்   ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவாக மாவட்ட கல்வி அலுவலர்  தி.ராஜேஸ்வரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து