முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன்: ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் அறிவிப்பு
இந்த அணியில் ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் பாங்க்ரூப், ஜாக்சன் பேர்ட், பாட் கம்மின்ஸ், பீட்டர் ஹான்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லியான், ஷான் மார்ஷ், டிம் பெய்ன், சாட் சையர்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

டிம் பெய்னுக்கு இடம்
ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான இந்த ஆஸ்திரேலிய அணியில், 7 ஆண்டுகளுக்கு பிறகு விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த 2013-14ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்ததுள்ளது. எனவே இந்த முறை பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி தீவிரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து