முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம்: சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக சசிகலா கணவர் நடராஜன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


போலி ஆவணம்...
சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.  இந்த கார் 1993–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், பயன்படுத்தப்பட்ட பழைய வாகனம் என்றும், போலி ஆவணங்களை தயாரித்து, காரை இறக்குமதி செய்துள்ளார். இதன்மூலம் ரூ.1 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக கூறி எம்.நடராஜன், பாஸ்கரன், லண்டனை சேர்ந்த பாலகிருஷ்ணன், யோகேஸ் பாலகிருஷ்ணன் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தி சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தலா 2 ஆண்டு சிறை
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, எம்.நடராஜன் உள்பட 4 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2010–ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எம்.நடராஜன் உள்பட தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீண்டகாலமாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தக்கோரி சி.பி.ஐ. தரப்பில், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


தண்டனை உறுதி ...
இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், சிறப்பு நீதிமன்றம் நடராஜனுக்கு விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியது. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் நடராஜனுக்கு, சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலாவின் அக்கா மகள் சீதளாதேவி மற்றும் அவரது கணவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கடந்த 3 நாட்களுக்கு முன் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து