முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் உத்தரவுப்படி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, விவசாயிகளின் முன்னிலையில் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்குக்கரை வாய்க்கால்களில் இருந்து பாசனத்திற்கு அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன் ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர்.
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது-

அமைச்சர்கள் பங்கேற்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்குக் கரைவாய்க் கால்களிலிருந்து பாசனத்திற்காக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் நேற்று தண்ணீரை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், பி.ஆர்.சுந்தரம், செல்வகுமார் சின்னையா, சத்யாபாமா மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செம்மலை, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ராஜா, வெற்றிவேல், மனோண்மணி, சக்திவேல், ஆர்.எம்.சின்னத்தம்பி ஆகியோர் கலந்துகொண்டனர்.

13 நாட்களுக்கு...

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க மேட்டூர் அணையின்கிழக்கு மற்றும் மேற்குக் கரை வாய்க்கால்களிலிருந்து, எள் மற்றும் நிலக்கடலை சாகுபடிக்காகமுதல் கட்டமாக நேற்று முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுள்ளது. இதைத் தவிர, மேலும் மூன்று கட்டங்களாகவும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன்மூலம் மேட்டூர் அணையின் கிழக்குக் கரை வாய்க்கால் பாசனப் பகுதியில் 27,000 ஏக்கர் நிலங்களும், மேற்குக் கரை வாய்க்கால் பாசனப் பகுதியில் 18,000 ஏக்கர் நிலங்களும், ஆகமொத்தம், 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்நிகழ்ச்சியில் மேட்டூர்   சப் கலெக்டர் மேகநாதரெட்டி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்ரமணி, விவசாய சங்க பிரநிதிகள் சுந்தரம், எஸ்.பழனிமுருகன், என்.சிவபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து