முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணை ஆணையத்திற்கு இதுவரை ஜெயலலிதா மரணம் தொடர்பாக 70 புகார் கடிதங்கள் வந்துள்ளன

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை :  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 70 புகார் கடிதம் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 25-9-2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பின்னர், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் இயங்குவதற்காக எழிலகம் கலச மகால் முதல் மாடியில் இடம் ஒதுக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கினார்.

ஜெயலலிதா மரணம் பற்றிய விவரங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ நவம்பர் 22-க்குள் கூறலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து போயஸ்கார்டனில் இருந்து விசாரணை தொடங்கப்படும். விசாரணை வெளிப்படையாக நடைபெறும் என ஆறுமுகசாமி கூறினார். விசாரணையை முடிக்க 3 மாத காலமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், அதற்குள் விறுவிறுப்பாக விசாரணையை மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

70 புகார் கடிதம்

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 70 புகார் கடிதம் வந்துள்ளது என்றும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் இதுவரை 8 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். வரும் 22-ம் தேதி, சரவணன் ஆஜராகி விளக்கமளிக்க அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கும் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து