முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த பத்து ஆண்டுகள் பொழுதுபோக்குத் துறையின் பொற்காலமாக இருக்கும்: முகேஷ் அம்பானி

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

மும்பை: இந்தியாவில் டிஜிட்டல் மற்றும் பொழுதுபோக்கு துறைகளுக்கு வரும் 10 ஆண்டுகள் பொற்காலமாக இருக்கும் என ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

வயகாம் நிறுவனத்தின் 10வருட கொண்டாட்டத்தில் அம்பானி பங்கேற்றார். இது ரிலையன்ஸின் நெட்வொர்க் 18 மற்றும் வயகாம் நிறுவனங்களின் கூட்டாக செயல்படும் ஒரு நிறுவனம்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
"வரும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் டிஜிட்டல் துறையும், பொழுதுபோக்குத் துறையும் பல மடங்கு பெருகும். அதாவது அடுத்த 10 வருடங்கள் பொழுதுபோக்குத் துறைக்கு பொற்காலமாக இருக்கும்.

மொபைல் டேட்டா பயன்பாட்டில் 155வது இடத்தில் இருந்த இந்தியாவை, முதல் இடத்துக்கு நாம் எடுத்துச் சென்றுள்ளோம். கடந்த மாதம் ஜியோ நெட்வொர்க்கில் மட்டும் 200 கோடி மணிநேரம் அளவு வீடியோக்கள் பார்க்கப்பட்டுள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே.

தலைமை பொறுப்பில் இருக்கும் அனைவரும் பெரிதாக கனவு காணும் தைரியம் பெற வேண்டும். அதை நனவாக்கும் உறுதியும் வேண்டும். எப்போதும் எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அவர்களுக்கு இருக்க வேண்டும்.

இதோடு மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் குணம் வேண்டும். இது நம்மைப்பற்றியது மட்டுமல்ல. மற்ற அனைவரைப் பற்றியதும் என்ற எண்ணம் வேண்டும். இந்த கொள்கைகள் தான் எனக்கு உதவி செய்துள்ளன" என்று அம்பானி பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து