முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம்: தோட்டா கடலோரக் காவல்படையுடையதே அல்ல: நிர்மலா சீதாராமன் விளக்கம்

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, ராமேஸ்வரம் மீனவர்கள் சுடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தோட்டா, கடலோரக் காவல்படையுடையதே அல்ல என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

விளக்கம் கேட்டேன்

சென்னை வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன் சம்பவம்குறித்து தகவலறிந்த உடனே கடலோரக் காவல்படையினரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தேன். அதன்பின்னரே, அவர்கள் தரப்பிலிருந்து ஆங்கிலத்தில் முதலிலும், பின்னர் தமிழிலும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கடலோரக் காவல்படை தலைவரிடமும் விளக்கம் கேட்டேன். அத்தகைய தோட்டா, கடலோரக் காவல்படையினரிடமே இல்லை என்று அவர் விளக்கமளித்தார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நான் தீவிரமாக விசாரிக்கவேண்டி இருக்கிறது.

உண்மை இருக்கலாம்

நமது மீனவர்களை சொந்த நாட்டுப் படையினரே தாக்குவது போன்ற தொனியில் பத்திரிகையாளர்கள் எழுத வேண்டாம். மீனவர்கள் படும் துன்பம் எனக்குத் தெரியும். அவர்கள் நலனுக்காக அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பிஜேபி ஆட்சியில் இல்லாதபோது மீனவர்களுக்கு பிரச்னை வந்தபோது, அதற்காக ராமேஸ்வரம் வரை வந்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசியது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ்தான். எனவே, இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தோட்டா, கடலோரக் காவல்படையுடையதல்ல. அந்தத் தோட்டா, எங்கிருந்து வந்தது என்றே தெரியாது. அதேநேரம், மீனவர்கள் கூறியதிலும் உண்மை இருக்கலாம். அதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து