முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லு மனைவி ராபரிதேவி மற்றும் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன்

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

பாட்னா: ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு லல்லு மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்விக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஐஆர்சிடிசி-க்கு சொந்தமான 4 ஓட்டல்களை பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடம் அளிக்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக லல்லு குடும்பத்தினர். பாட்னாவில் 3 ஏக்கர் நிலம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

லல்வின் மகன் தேஜஸ்வியிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் வரும் 20-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தேஜஸ்விக்கு சம்மன் அனுப்பியுள்ளது. லல்லுவின் மனைவி ராப்ரி தேவி வரும் 24-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட் டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து