முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம் - சிவகங்கை விழாவில் துணை முதல்வர் ஒ.பி.எஸ். பேச்சு

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சிவகங்கை : தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம் என்று சிவகங்கை விழாவில் துணை முதல்வர்  ஒ.பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

சிலகங்கையில் நேற்று எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் திரளாக கலந்துகொண்டனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். பிறகு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் ரு.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்.

முன்னதாக இந்த விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்  பேசியதாவது:-

வீரம் செறிந்த மண்

இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில்  முதல் முதலாக வெள்ளையரை எதிர்த்து, வீரப் போர் புரிந்து, வெற்றி கண்டு, வீரமங்கை என்று பெயரெடுத்த ராணி வேலு நாச்சியார் ஆண்ட மண் சிவகங்கை. தியாகத்திற்கும், விசுவாசத்திற்கும், இலக்கணமாய் வாழ்ந்த  மருது சகோதரர்கள் வாழ்ந்த பூமி, சிவகங்கை பூமி. தனது இன்னுயிரை கொடுத்து,வெள்ளையரின் ஆயுதக்  கிடங்கை வெடிக்கச் செய்த,தியாக மங்கை, வீரத்தாய் குயிலிவளர்ந்த பூமி இந்த சிவகங்கை.வீரம் செறிந்த மண், தியாகம் நிறைந்த மண், வெற்றி திகழ்ந்த மண்,என்று தமிழகமே பெருமை கொள்ளும் இந்த சிவகங்கை சீமையில், புரட்சித் தலைவருக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 

அ.தி.மு.க மாபெரும் இயக்கம்

எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழா, மக்கள் நடத்துகிற மகத்தான விழாவாக, உலகமே வியக்கும் வகையில்  நடந்து  கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் மங்காத மக்கள் செல்வாக்கைப் பார்த்து,  நமது எதிரிகள் மலைத்துப் போயிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அசைக்க முடியாமல், சில உதிரிகள் களைத்துப் போயிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்  மட்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்காமல் இருந்திருந்தால், சில சுயநலவாதிகள் கச்சத் தீவை தாரை வார்த்தது போல, தமிழ் நாட்டையே தாரை வார்த்திருப்பார்கள்.

புகழுக்காக ஏங்கியவர் அல்ல

மக்கள், தங்களது தேவைகளை  கடவுளிடம் வேண்டுகிறார்கள். எங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடு, மகிழ்ச்சியைக் கொடு, நிம்மதியைக் கொடு, பாதுகாப்பைக் கொடு  என்று தங்களுக்கு வேண்டியதை ஆண்டவனிடம் கேட்பார்கள். தமிழக மக்களின்  இந்த வேண்டுதல்கள் அனைத்தும்  நிறைவேற, நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது தவப் புதல்வனை  இந்த பூமிக்கு அனுப்பி வைத்தான் ஆண்டவன். அவர்தான்  கொடை வள்ளல்  நமது எம்.ஜி.ஆர். சிலரைப் போல, சொத்து சேர்க்க ஆசைப்பட்ட தலைவர் அல்ல நமது எம்.ஜி.ஆர். ! மக்களின் அன்பை சேர்த்தவர் நமது எம்.ஜி.ஆர் ! சிலரைப் போல, புகழுக்காக ஏங்கிய தலைவர் அல்ல நமது எம்.ஜி.ஆர்! ஏழைகளின் துன்பங்களை நீக்கி புகழின் உச்சிக்கு சென்ற தலைவர்  நமது எம்.ஜி.ஆர் !சிலரைப் போல, குடும்பத்திற்காக ஆட்சி நடத்தியவர் அல்ல  நமது எம்.ஜி.ஆர் !ஆட்சிக்குள்ளே குடும்பத்தின் தலையீடே இருக்கக் கூடாது என்று ஆணையிட்டவர் நமது எம்.ஜி.ஆர் ! மக்களின் பசியாற்றி, அவர்களின் வயிறும், மனமும் நிறைவதைப் பார்த்து நிம்மதி அடைந்தவர் எம்.ஜி.ஆர் ! எதிர்காலத்தை தமிழக மக்களுக்கு உருவாக்கி தந்த உன்னத தலைவர்  எம்.ஜி.ஆர் ! பிறருக்கு கொடுத்து வாழ்வதையே கொள்கையாக கொண்டு வாழ்ந்த எம்.ஜி.ஆர் ! கொடுப்பதற்கு நல்ல மனம் வேண்டும். அதுவும் பிறவி குணமாக இருக்க வேண்டும்.

அம்மாவின் ஆட்சி...

ஏழைகள் இன்ப வாழ்வு பெற வேண்டும் என்பதையே தனது லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்  எம்.ஜி.ஆர்..அந்த அன்பு  மழைதான்,இன்றும்தமிழ் நாட்டையே  வளப்படுத்திக்  கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டிலே ஜாதிச் சண்டைகள் இல்லை. மதச் சண்டைகள் இல்லை. அதற்கு காரணம் அம்மாவின் ஆட்சி. தமிழ் நாட்டில் அடுப்பெரியாத வீடுகள் இல்லை. விளக்கெரியாத வீதிகள் இல்லை. அதற்குத் காரணம் அம்மாவின் ஆட்சி. பிள்ளைகளைப் படிக்க வைக்க வசதி இல்லையே, என்று மனம் உடையும் பெற்றோர்கள் தமிழ் நாட்டில் இல்லை. அதற்குத் காரணம் அம்மாவின் ஆட்சி.

இரட்டை இலை சின்னம்

மக்கள் பணத்தை  தனக்காக சுருட்டுவது அராஜக ஆட்சி. மக்கள் பணத்தை மக்களுக்கே கொடுப்பது ஜனநாயக ஆட்சி. அந்த ஜனநாயக ஆட்சிக்குப் பெயர்தான்  அம்மாவின் ஆட்சி. எம்.ஜி.ஆரை போலவே,கொடுக்கின்ற குணமும், ஏழைகளின் பசியாற்றுகின்ற குணமும், பிறவிக் குணமாய் பெற்று வந்தவர் அம்மா. எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா, தமிழக மக்களின் இதயத்தில் இருக்கிறார்கள். விசுவாசத் தொண்டர்களின் உள்ளத்தில்  இருக்கிறார்கள். அந்த இரண்டு தெய்வங்களின் ஆசிகளோடு,தற்காலிகமாக போடப்படும் தடைகளையெல்லாம் உடைத்து, நமது வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம். சின்னம் நமக்குத்தான் கிடைக்கும் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், மக்களை ஏமாற்ற சிலர் மனசாட்சியின்றி பொய் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறு துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து