முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாம் உறுதியாக செயல்பட்டு சுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் உலக கழிவறை தினத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நாம் உறுதியாக செயல்பட்டு சுத்தத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இதற்காக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

ஐநா சபையால் நேற்று உலகம் முழுக்க சர்வதேச கழிவறை தினம் கொண்டாப்பட்டது. உலகம் முழுவதும் நல்ல சுகாதார வசதியை ஏற்படுத்தவும், சுத்தத்தை பேணிக்காக்கவும் இந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையடுத்து இந்த நாள் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில் எழுதி இருக்கிறார். மேலும் தனது டிவிட்டுடன் ஒன்றரை நிமிட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அவர் தனது டிவிட்டில் ''இந்த உலக கழிவறை தினத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நாடு முழுவதும் சுத்தத்தை பேணிக்காப்போம் என்று உறுதி அளிக்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார். அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் இந்தியா முழுக்க சுகாதாரத்தில் ஏற்பட்டு இருக்கும் முன்னேற்றம் குறித்த காட்சிகள் அடங்கி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து