முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடியில் 3மிமீ மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து