முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் 3 கேள்விகள்

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - ரபேல் விமான ஒப்பந்தத்தை குறை கூறுவது வெட்கக் கேடானது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் நிர்மலா சீத்தாராமனுக்கு அவர் மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.


   1). ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பாரீஸில் பிரதமர் மோடி அறிவிக்கும் முன்பாக, அமைச்சரவை குழுவின் அனுமதியை பெற்றிருந்தாரா?
   2). ஒப்பந்தத்தின்படி, ஒரு ரபேல் விமானத்தின் இறுதி விலையை வெளிப்படையாக கூற முடியுமா?
   3). பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல்-ஐ புறக்கணித்துவிட்டு, எந்த முன் அனுபவமும் இல்லாத பிரபல தொழிலதிபர் நிறுவனத்திற்கு விமான பாகங்கள் இணைக்கும் ஒப்பந்தத்தை பிரதமர் கொடுத்தது ஏன்? என கேட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி பாரீஸ் நகரத்துக்கு சென்றபோது ரூ.58,000 கோடி மதிப்பிலான 36 ரபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக அந்நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

ரபேல் போர் விமான ஒப்பந்தமானது, பிரபல தொழிலதிபரின் நலனுக்காக பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இது குறித்து பதிலளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் ஒப்பந்தம் வெளிப்படையாக நடந்திருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தனது 10 ஆண்டு கால ஆட்சியில் எந்த ஒப்பந்தத்தையும் போடாமல் இருந்து விட்டு இப்போது அந்த திட்டத்தை குறை கூறுவது வெட்கக்கேடானது என்றார்.

இதற்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், எது வெட்கக் கேடானது உங்கள் பாஸ் (பிரதமர் மோடி) உங்களை அமைதியாக்கியதுதான் வெட்கக் கேடானது என்று கூறியுள்ள ராகுல் அதில் 3 கேள்விகளையும் கேட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து