முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க காரியகமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இன்று டெல்லியில் அக்கட்சியின் காரிய கமிட்டி  கூடுகிறது.

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக உள்ள ராகுல் காந்தி பதவி உயர்த்தப்பட்டு கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்பதே கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பமாகும். கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு அவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு விழாவில் பேசிய சோனியா காந்தியும் விரைவில் நீங்கள் விரும்பியது நடக்கும் என்று ராகுல் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை சூசகமாக தெரிவித்தார். இந்நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது.

சோனியா இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

அதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்வார். அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாவிட்டால், ராகுல் ஒருமனதாக புதிய தலைவராக அறிவிக்கப்படுவார். இதனால் இன்று நடைபெறும் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து