முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கான இடம் கிடைத்தே தீரும்: ஒரு நடிகையின் நம்பிக்கை!

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா.

அண்மையில் வெளியாகியுள்ள சுசீந்திரனின் 'நெஞ்சில் துணி விருந்தால்' படத்தில் நாயகன் சந்தீப்பின் தங்கையும் விக்ராந்தின் காதலியுமான அனு பாத்திரத்தில்  நடித்திருப்பவர் தான்  இந்த ஷாதிகா.படத்தின் கதாநாயகி ஷாதிகா இல்லையென்றாலும்  கதையில் கவனம் குவியும் கதாபாத்திரத்தில் வந்திருப்பவர் .

இதற்கு முன் ஷாதிகாவின் கதை என்னவென்று கேட்டால் வழக்கமாக பலருக்கும் உள்ளதைப் போல அது  சிறுகதையாக இருக்காது. பெரிய தொடர்கதையே எழுதும் அளவுக்கு வரலாறே வைத்துள்ளார் இந்த ஷாதிகா இவர் குழந்தையாக இருந்த போது ஏன் பேச்சு வராத போதே கேமரா பார்த்து நடித்தவர்.அரிராஜனின் 'மங்கை' தொலைக்காட்சித்  தொடரில் நடித்த போது இவருக்கு இரண்டு வயது. சீமானின் 'வீர நடை' படம் தான் முதல் சினிமா அனுபவம்.

அப்போது வயது இரண்டரை தான் . அதன் பிறகு ஆளும் வளர வாய்ப்புகளும் பெருக 'ரோஜா வன'த்தில் குட்டி லைலா ,' குபேரனி'ல் கெளசல்யா வின் மகள் , 'சமஸ்தான'த்தில் சரத்தின் மகள் , 'ராமச்சந்திரா'வில் சத்யராஜின் மகள் , 'ஆனந்தம்' முரளியின் மகள் , என்று வளர்ந்து  'குருவி'யில் விஜய்யின் தங்கையாகி 'மாசிலாமணி'யில் சுனைனாவின் தங்கை என்று கலந்து கட்டி 30 படங்கள் நடித்து விட்டார்.

தொலைக்காட்சியில் 'சித்தி' தொடரில் வில்லி யுவராணியின் மகள் .' கோலங்கள் 'தொடரில் தொல்காப்பியனின் சிறுவயது தங்கை என்று நடித்தும் உள்ளவர். சுட்டி டிவியில் சுட்டி தொகுப்பாளராக மூன்று ஆண்டுகள் அனுபவம். அது மட்டுமல்ல குழந்தை நட்சத்திரங்களுக்கெல்லாம்  பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த 'என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் 'பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்குப்  போன ஒரே தமிழ்க்  குறும்படம் ஆகும். கதாபாத்திரமாக மட்டுமல்லாமல் சிறிது நேரமே வந்தாலும் அந்த நடிகர் அல்லது நடிகைக்கு நடிப்பிலும் பெயர் பெற்றுத் தரும்படி  அந்த வாய்ப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்வார். அப்படித்தான்  'நான் மகான் அல்ல' படத்தில் கொலை செய்யப்படும் பெண்ணாக நடிக்க வைத்தார். 'பாயும் புலி 'படத்தில் விஷாலின் தங்கை ,' மாவீரன் கிட்டு' வில் ஸ்ரீதிவ்யாவின் தோழி என நடிக்க வைத்தார்.  அப்படியே அந்தப் படங்களிலும் வந்தேன்.

இப்போது 'நெஞ்சில் துணிவிருந்தால்' வாய்ப்பு கொடுத்திருக்கிறார். குறிப்பாக  இது தமிழ் , தெலுங்கில் உருவான படம். "நான் படிப்பிலும் படு சுட்டி. பள்ளி நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட நாள்களில்  படப்பிடிபபில் இருந்தாலும் அது படிப்பைப் பாதிக்காதபடி நன்றாகப் படிப்பேன். ப்ளஸ் டூவில் 90% மார்க் எடுத்தேன். பி.டெக் முடித்தேன். எம்.பி.ஏ. கரஸில் சேர  இருக்கிறேன். " என்கிறார் .

இப்போது ஷாதிகா சுசீந்திரனின் 'ஏஞ்சலினா ' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்ஷாதிகா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து