முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் பார்முலா-1 சாம்பியன் மைக்கேல் சூமாக்கரின் கார் ரூ.48 கோடிக்கு ஏலம் போனது

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் - பிரபல கார் பந்தைய வீரரும், முன்னாள் பார்முலா-1 சாம்பியனுமாந மைக்கேல் சூமாக்கர் கார் பந்தையங்களில் பயன்படுத்தி வெற்றி பெற்ற கார் ஒன்று ரூ.48 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

7 முறை சாம்பியன்ஷிப்

 சர்வதேச கார் பந்தையங்களில் 91 ரேஸ் வெற்றி, ஏழு முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள பிரபல ரேஸ் வீரரான மைக்கேல் சூமாக்கர் எப்.1 பந்தையஙகளில் பங்கேற்ற தலைசிறந்த வீரராக இருக்கிறார்.  நியூயார்க் நகரில் அமைந்துள்ள சோத்பிஸ் கான்டெம்ப்ரரி ஆர்ட் நிறுவனம் மைக்கேல் சூமாக்கர் காரினை ஏலத்தில் விட முடிவு செய்தது. அதன்படி மைக்கேல் சூமாக்கர் கார் வாங்க எட்டு பேர் ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில், ஆறு நிமிட சுவாரஸ்யம் ஃபெராரி எதிர்பார்த்தை விட இருமடங்கு விலையில் ஏலம் போனது.

ரூ.48.7 கோடிக்கு ஏலம்
 
 ஏலத்தொகையில் ஒருபங்கு மைக்கேல் சூமாக்கரின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரபல எப்.1 வீரரின் பட்டம் வென்ற கார்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூ யார்க் நகரில் நடைபெற்ற ஏலத்தில் 75 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.48.7 கோடிக்கு ஏலம் போனது. மைக்கேல் சூமாக்கரின் ஃபெராரி எப்.2001 ஏல விலை அதிகபட்சமாக 40 லட்சம் டாலர்களாக இருக்கும் என ஏல நிறுவனம் எதிர்பார்த்த நிலையில், ஃபார்முலா ஒன் ரேஸ் கார் 75.4 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 48 கோடி (ரூ.48,73,09,760க்கு) விற்பனையானது.

படுகாயம் அடைந்து...

 211 என்ற சேசிஸ் நம்பர் கொண்ட ஃபெராரி கார் ரேஸ் செய்யும் நிலையில் உள்ளதாகவும், இதனை வாங்கியவருக்கு போக்குவரத்து மற்றும் காரெஜ் உள்ளிட்ட வசதிகளை ஃபெராரி செய்வதாகவும் தெரிவித்துள்ளது. ஃபெராரி எப்.2001 மாடலில் 3.0-லிட்டர் வி10 இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 800 முதல் 900 பி.எச்.பி. வரை டியூனிங்கிற்கு ஏற்ற செயல்திறன் வழங்கும். 2013-ம் ஆண்டு ஏற்பட்ட கொடூர விபத்தில் தலையில் படுகாயமடைந்த மைக்கேல் சூமாக்கர் தற்சமயம் காயங்களில் இருந்து மீண்டு வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து