முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான்போட்டி ராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற மாரத்தான்போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் டாக்டர் மணிகண்டன் புகைப்படக்கண்காட்சியை திறந்து வைத்தார்.
 ராமநாதபுரம் நகரம் புதிய பேருந்து நிலையம் அருகே, பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் போட்டியினையும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக மூன்று நாட்கள் நடைபெறும் பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியினையும் தொடங்கி வைத்தார்.
    தமிழ்நாடு அரசின் சாhர்பில், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 30.06.2017 அன்று மதுரை மாவட்டத்தில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து இவ்விழா நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 25.11.2017 அன்று பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதற்காக ராமநாதபுரம் டி-பிளாக்கில் உள்ள அம்மா பூங்கா மைதானத்தில் கடந்த 03.11.2017 அன்று பந்தல் கால் நடும் விழா நடைபெற்றது. தொடர்ந்து, பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். வரலாற்று சிறப்புகள் குறித்து பள்ளி, கல்லூரிகளிடையே பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போடம்டி ஆகிய போட்டிகளும், விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.  
 இந்நிலையில் ராமநாதபுரம் நகரம் புதிய பேருந்து நிலையம் அருகே தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன்  மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இம்மாரத்தான் போட்டியானது சிறுவர், சிறுமியர் என இரு பாலருக்கும் தனித்தனியே நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு 25.11.2017 அன்று நடைபெறவுள்ள பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரிசுகளை வழங்குவார்கள்.
 மாரத்தான் போட்டியினை தொடர்ந்து, ராமநாதபுரம் நகரம் புதிய பேருந்து நிலையம் அருகே செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த ‘பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியினை” தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியானது வரும் 21.11.2017 வரையிலான மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இக்கண்காட்சியில் பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் சிறப்புகளை விளக்கிடும் வகையிலான பல அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. பொது மக்கள் ஏராளமானோர் இக்கண்காட்சியினை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
  இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ராம்கோ தலைவர் மாவட்ட அவைத்தலைவர் செ.முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலன், ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை,  ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதல்வர் குருசாமி  ஆகியோர் உட்பட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து