முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் : கலெக்டர் க.லட்சுமி பிரியா, வழங்கினார்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, தலைமையில் நேற்று (20.11.2017) நடைபெற்றது.

 தொகுப்பு வீடுகள்

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவி திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 469 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிலவேம்பு கசாயத்தினை குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்கள். மேலும், டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைவருக்கும் வழங்கினார்கள்.

மனித உயிர்களை டெங்குவில் இருந்து பாதுகாத்திட வேண்டும் அதற்கு ஏ.டி.ஸ் கொசுக்களை ஒழித்திட வேண்டும், தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும், கழிவு நீர்கள் தேங்குவதை அகற்றிட வேண்டும், குப்பைக் கூளங்களை குப்பைத்தொட்டியில் போடவேண்டும், நமக்கு எந்த நோய்கள் வந்தாலும் அரசு மருத்துவமனையை அனுகிட வேண்டும், டெங்குவை ஒழித்திட வேண்டும், நிலவேம்பு கசாயத்தை குடித்திட வேண்டும் ஆகிய வாசகங்கள் இத்துண்டறிக்கையில் இடம் பெற்றிருந்தன. மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாவட்ட கலெக்டர் கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புதிட்டம்) பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து