முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையிலிருந்து படகில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் கடத்தல்காரர் ஒருவர் கைது,மூவர் தப்பி ஓட்டம்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- இலங்கையிலிருந்து கடல் வழியாக நாட்டு படகில் மண்டபம் கடல் பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 2 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை உளவுப்பிரிவு போலீஸார்கள் நேற்று கைப்பற்றி,கடத்தல்காரர் ஒருவர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இலங்கையில் இருந்து பாக்ஜலசந்தி கடல் வழியாக ராமேசுவரம்,மண்டபம்,பாம்பன் ஆகிய கடல் பகுதிக்கு சமிபகாலமாக  தொடர்ந்து கடத்தல் பொருளான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும்,அதுபோல இப்பகுதிகளிலிருந்து இலங்கைக்கும்  கடத்தல் கும்பல் படகுகளில் போதை பொருள்களான கஞ்சா,அபின், போயிலை,மாத்திரை கடல் அட்டை,கடல் குதிரை ஆகிய பொருள்களை கடத்தி செல்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இந்த கடரோலப்பகுதிகளில் கடத்தலை தடுக்க  கண்காணிப்பு பணியில் இந்திய கடலோர காவல் படை மற்றும் மத்திய,மாநில கியூ பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கையின் காரணமாக கடத்தல் சம்பவங்கள் சில மாதங்களுக்கு முன்பு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இலங்கையில் இருந்து மண்டபம் பகுதிக்கு தங்க கட்டிகள் கடத்தப்பட்டுவருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் நேற்றுக்கு முன் தினம் இரவு  கிடைத்தது. இதையடுத்து போலீசார் மண்டபம் வடக்கு கடலோரப் பகுதியில் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நேற்று காலை மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு கரையில் நின்றது. அதன் அருகே நின்றிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் அச்சுத்துடன் தப்பி ஓடினார். இதையறிந்த மாநில உளவுப்பிரிவு  போலீசார் அவரை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று  பிடித்தனர்.  இந்த நிலையில் கடத்தல்காரர் நசீரை போலீஸார் பிடித்தை மறைந்து பார்த்துக்கொண்டிருந்த அவரின் கூட்டாளிக கடத்தல்காரர்கள் மூவர் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.அதன்  பின்னர் போலீஸார் பிடித்து வைத்திருந்த கடத்தல்காரரிடம்   விசாரணை செய்தபோது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை பகுதியை சேர்ந்த கமல்பாஷா மகன் நசீர் (37) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீஸார் கைது செய்து,அவர் நின்று கொண்டிருந்த நாட்டு படகை சோதனை செய்தனர்.அப்போது சாக்கு பையில்  தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது.போலீஸார் உடனே பையை கைப்பற்றி சோதனையிட்டதில்ன 6 கிலோ 856 கிராம் எடையளவுடன் கூடிய  தங்க கட்டிகள் இருந்ததும்.இதன் மதிப்பி  ரூ,2 கோடி,39 லட்சம் என தெரியவந்தது.பின்னர் போலீஸார் படகை  பறிமுதல் செய்தனர்.பின்னர் தங்க கட்டிகளையும், நசீரையும் மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் இது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்க கட்டிகள் குறித்து போலீசார் நசீரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள் கிடைத்திருப்பதால் தொடர்ந்த விசாரணையில்  இந்த கடத்தல் சம்பவத்தில் பெரும் கடல் புள்ளிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.இதனால் நசீரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரையில் தங்கம் சிக்கிய சம்பவம் குறித்து மண்டபம் மீனவர்கள் மத்தியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து